இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தது இந்திய கிரிக்கெட் வாரியம். தற்போது இந்த புதிய ஜெர்ஸியால் ரசிகர்கள் இரு அணியாக சமூக வலைத்தளமான ட்விட்டர் தளத்தில் பிளவுப்பட்டு நிற்கின்றனர். 

image

ரசிகர்களில் சிலர் இது பார்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஜெர்ஸியை போல இருப்பதாக சொல்லி உள்ளனர். சிலர் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக சில சர்வதேச கிரிக்கெட் அணிகள் அறிமுகம் செய்துள்ள ஜெர்ஸியை போல இருப்பதாக சொல்லி உள்ளனர்.

சிலர் இதற்கு முன்னதாக இந்தியா உலகக் கோப்பை தொடரில் அணிந்து விளையாடிய ஜெர்ஸியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என சொல்லி உள்ளனர். அதே நேரத்தில் ரசிகர்கள் சிலர் இதற்கு என்ன குறை? நல்லா தானே இருக்க என திருப்தி அடைந்துள்ளனர். 



‘நூறு கோடி மக்களின் உற்சாக ஜெர்ஸி’ என இந்த புதிய ஜெர்ஸி புரோமோட் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த ஜெர்ஸியை தான் இந்தியா எதிர்வரும் டி20 கிரிக்கெட்டில் அணிந்து விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.