இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது விவோ நிறுவனத்தின் Y20T மாடல். பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. ஆன்லைன், ஆப்லைன் என இரண்டு மோடிலும் இந்த போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image
சிறப்பம்சங்கள்!

6.51-இன்ச் LCD, ஸ்னாப்டிராகன் 662 SoC சிப்செட், 6ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், Extended RAM 2.0 தொழில்நுட்பம், மல்டி டர்போ 5.0 மோட், ரியர் சைடில் டிரிபிள் கேமரா, அதில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச்சில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, Funtouch OS 11.1 அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 11, 5000 mAh பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், மைக்ரோ USB, 4G கனெக்டிவிட்டி, பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் மாதிரியானவை இந்த போனில் உள்ளது.

இந்த போனின் விலை 15,490 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.