ஒரு நாள் மற்றும் இருபது கிரிக்கெட் போட்டிகளின் தலை சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
விளையாட்டு தொடர்பான இணையதள பக்கத்திற்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி, ஐசிசி, ஐபிஎல், சாம்பியன்ஸ் டிராபி என தோனி வெல்லாத கோப்பைகள் என்று எதுவும் இல்லை என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் தோனியை “THE KING KONG” என்று கூட அழைக்கலாம் என தெரிவித்துள்ள ரவிசாஸ்திரி, தோனியின் சாதனைகளை நெருங்கக்கூட முடியாது என கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM