’பீஸ்ட்’ படத்தில் பாடல் எழுதியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். விஜய்யின் 65 வது படமான ‘பீஸ்ட்’படத்திற்கு அனிருத் இசையமைகிறார். இந்தப் படத்தின் 6-ஆம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. நவம்பர் இறுதியில் முழு படப்படிப்பையும் முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக ‘பீஸ்ட்’ படத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். இதுகுறித்த தகவல்கள் இத்தனை நாட்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் பாடல் எழுதியிருப்பதை உறுதி செய்திருக்கிறார். படக்குழுவே அறிவிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால், விஜய் – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். டாக்டர் படத்திலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன் ‘செல்லம்மா’, ‘ஓ பேபி’ பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM