நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் மோடி ஐ.நா சபை கூட்டத்தில் உரையாற்றினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், ”நிலம் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு அவற்றை உரிமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடைக்கோடி மக்களைச் சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது.

image

ஏழைகளுக்கு வீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு வசதி போன்றவற்றை இந்திய அரசு அளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண வியாபார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றுகிறார். 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை உலகம் சந்தித்துள்ளது.பன்முகத்தன்மை என்பது வலிமையான ஜனநாயகத்தின் அடித்தளம். உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்திருக்கிறது. 

குஜராத் முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் கடந்த 20 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இந்தியா இப்போது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது” என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.