இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரது அதிகாரப்பூர்வ குடியிருப்பான வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ஆப்கான் நிலவரம், சீனாவுடனான எல்லை விவகாரம் உட்பட சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதிபராக பைடன் பொறுப்பேற்ற பின்னர் அவர் பிரதமர் மோடி முதல் முறையாக சந்தித்துள்ளார்.