பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து அணி திடீரென வெளியேறி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் 18 ஆண்டுகளுக்கு பின்பு நியூசிலாந்து அணி சுற்று பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் (செப்.17, 19, 21) மற்றும் 5 டி20 போட்டிகளில் (செப்.25, 26, 29, அக்.1, 3) விளையாடவிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி முழு சுற்றுப் பயணத்தையும் ரத்து செய்தது.

image

இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டேவிட ஒயிட் “எங்கள் நாட்டு அரசின் பாதுகாப்பு ஆலோசனை குழு மூலம் பாகிஸ்தானில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுபோன்ற சூழலில் எங்கள் வீரர்களின் உயிர் முக்கியமானதாக கருதி, இந்தச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்கிறோம். இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பேரிழப்பாக இருக்கும். ஆனால் வீரர்கள் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்” எனத் தெரிவித்தார். 

கடந்த 2009ம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் சமரவீராவுக்கு இடது காலில் குண்டு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.