உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் டிராகன் விண்களத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர். அதில் புற்றுநோயிலிருந்து மீண்ட 29 வயது அமெரிக்க பெண்ணான Hayley Arceneaux அவர்களில் ஒருவர்.   

image

இவர்கள் நால்வரும் பூமியின் வட்ட பாதையை அவர்களாகவே மூன்று நாட்களுக்கு சுற்றி வருவார்கள் என்றும், அவர்களுக்கு துணையாக தொழில்முறை விண்வெளி பாதுகாலவர்கள் யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) நிறுவனத்தின் முதல் பிரைவட் பயணம் இது. இதனை ஒருங்கிணைத்துள்ளவர் Jared Isaacman. செல்வந்தரான அவர் தான் இந்த பயணத்திற்கு தொடக்கப்புள்ளி. பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். Inspiration4 என இவர்கள் நால்வரும் அழைக்கப்படுகின்றனர். 

யார் இந்த Hayley Arceneaux!

பத்து வயதில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் Hayley Arceneaux. அவருக்கு செயிண்ட் ஜூட் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. இடது காலின் மூட்டு மற்றும் தொடை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் ராட் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by SpaceX (@spacex)


Prosthesis சிகிச்சை மேற்கொண்டவர், டைட்டானியம் ராட் பொருத்தப்பட்டவர், இளம் வயது அமெரிக்கர் என மூன்று சாதனைகளை இந்த பயணத்தின் மூலம் படைத்துள்ளார் அவர். 

தற்போது தனக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் அவர் பணியாற்றி வருகிறார்.

இதையும் படிக்கலாம் : “நீண்ட யோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்தேன்” – டி20 கேப்டன் பொறுப்பை துறந்த கோலி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.