தன் மகனின் முதல் திரைப்படம் அனபெல் சேதுபதி நேரடியாக ஓ.டி.டியில் வெளியாவதில் வருத்தம் இல்லை என ஆர்.சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றி அடைந்தவர் ஆர்.சுந்தர்ராஜன் இவரின் மகன் தற்போது அனபெல் சேதுபதி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்தப் படம் வரும் 17ஆம் தேதி Hot Star தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

image

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு தன் மகனை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது பேசிய ஆர்.சுந்தர்ராஜன் தன் மகனின் முதல் படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாவதில் எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்தார். அத்துடன் இது காலமாற்றம், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எங்கள் காலத்தில்  திரைப்படத்தை பார்க்க கோயம்புத்தூரில் உள்ள திரையரங்கிற்கு சென்றேன் பார்த்தேன். ஆனால் தற்போது அனைத்தும் கைக்குள் அடங்கி விட்டது என கூறினார். எனவே இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் எந்த வருத்தமும் இல்லை என அவர் கூறினார். 

இதையும் படிக்கலாம் : NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.