அரசின் பங்குகளை தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 2023-ஆம் ஆண்டு, அரசு பங்கில் 4.26 சதவீதத்தை 3000 கோடி ரூபாய்க்கும், 2031-ஆம் ஆண்டு அரசு பங்கில் 6.10 சதவீதத்தை 14,000 கோடி ரூபாய்க்கும், 2061-ஆம் ஆண்டு அரசு பங்கில் 6.76 சதவீதத்தை 9000 கோடி ரூபாய்க்கும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

image

ரிசர்வ் வங்கி நடத்தும் இந்த ஏலமானது மும்பையில் ரிசர்வ் வங்கியால் செப்டம்பர் 17-ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட பங்கு விற்பனையில் 5 சதவீதம் வரை தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு போட்டியில்லா ஏல முறை திட்டப்படி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி மற்றும் போட்டியற்ற ஏலங்களை ரிசர்வ் வங்கியின் இ-கியூபர் அமைப்பில் மின்னணு முறையில் செப்டம்பர் 17ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலங்களின் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும். வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் அதற்கான கட்டணத்தை செப்டம்பர் 20ம் தேதி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் : PIB

இதையும் படிக்கலாம் : டோக்கியோ ஒலிம்பிக்கின் இந்திய ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நீக்கம் –  விமர்சித்தது காரணமா? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.