ஃபைனான்ஸ்பஸ் என்ற நிதி நிறுவனம் ஒன்று அக்டோபரில் 10 நாட்களில் 13 பயங்கரமான திகில் திரைப்படங்களைப் பார்க்கும் நபர்களுக்கு 1,300 டாலர் ( 95ஆயிரம் ரூபாய்) செலுத்துவதாக அறிவித்துள்ளது.

ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டின் அளவு பார்வையாளர்களுடனான அதன் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதைக் கண்டுபிடிப்பதே இந்த செயல்திட்டத்தின் நோக்கம் ஆகும். ஃபைனான்ஸ்பஸ் ஹாரர் மூவி ஹார்ட் ரேட் ஆய்வுஎன்று அழைக்கப்படும் இந்த சவாலில் பங்கேற்கும் நபர், 10 நாட்களில் 13 பயங்கரமான திரைப்படங்களைப் பார்ப்பார்கள். ந்த நேரத்தில் அவர்களது இதய துடிப்பு ஃபிட்பிட்டைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

image

குறைந்த பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட் திகில் திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு அதிகமாக பயத்தை அளிக்கிறதா இல்லையா என்பதை ஃபைனான்ஸ்பஸின் ஆய்வின் மூலமாக அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம்,” என்று அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சவாலுக்கான அனைத்து திரைப்படங்களின் வாடகை செலவுகளையும் ஈடுசெய்ய FitBit நிறுவனம் $ 50 தொகையை பங்கேற்பவர்களுக்கு வழங்கும்.

ஹாரர் ஃபெஸ்ட் பார்க்கும் பட்டியலில் உள்ள 13 திரைப்படங்கள் இவைதான்: Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle.

image

ந்த போட்டியில் அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்  மட்டுமே பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைப்படிக்க: பில்லி சூனியம், மாந்திரீகம் பெயரில் மோசடி: 2.5 சவரன் தாலிச்சங்கிலியை பறிகொடுத்த பெண் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.