நிலவை ஆய்வு செய்து வரும் சந்திரயான்-2 விண்கலம் பல புதிய விஷயங்களை கண்டறிந்து தகவல் அளித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய தாதுக்கள் படிமங்களாக இருப்பதை சந்திரயான் -2 கண்டறிந்திருப்பதோடு, நீரேற்றம் மற்றும் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதற்கான தெளிவான அறிகுறிகளையும் கண்டறிந்து அனுப்பியுள்ளது. நிலவின் மத்திய மற்றும் உயர் அட்சரேகைப் பகுதுயில் புறகாற்று மண்டலத்தில் ஆர்கன்-40 வாயு இருப்பதை சந்திரயான்-2 கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

image

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. திடீர் தொழில்நுட்ப கோளாறால் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. ஆனால், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவை சுற்றிந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.