வழக்கமாக வேலைக்காக ஒரு நிறுவனத்தை அணுகும் போது ஒவ்வொருவரும் அவர்களது கல்வி, பணி அனுபவம், திறன்கள் மாதிரியான சுய விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை சமர்பிப்பது வழக்கம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதனை மின்னஞ்சல் மூலம் சமர்பித்து வருகிறோம். எழுத்துகளை கடந்து வீடியோ வடிவிலான பயோடேட்டா குறித்து கூட பலர் முயற்சி செய்து பார்த்திருக்கலாம். 

இருப்பினும் ஒவ்வொரு நிறுவனத்திலும் குவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான பயோடேட்டாக்களில் சில நூறு மட்டுமே வடிகட்டப்பட்ட நேர்காணல் செய்யப்படுகிறது. அதில் சில பேருக்குதான் வேலையும் கிடைக்கிறது.  

இந்நிலையில் அயல்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வேலைக்காக தனது பயோடேட்டாவை ஒரு நிறுவனத்தில் சமர்பித்துள்ளார். அதை படித்து பார்த்த அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு திறனுக்காக அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளனர். 

அப்படி என்ன எழுதினார்?

அந்த நபர் தனது தனித்திறன்களில் ஒன்றாக ‘GOOGLING’ என குறிப்பிட்டுள்ளார். அதனால் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனை அந்த நிறுவனத்தை சேர்ந்த Cat McGee என்ற சாப்ட்வேர் டெவலெப்பர் ட்விட்டர் தளத்தில் ட்வீட்டாக பகிர்ந்துள்ளார். 

image

அதற்கு நெட்டிசன்கள் பலர் பயோடேட்டா எழுதியவரை கொண்டாடி வருகின்றனர். அதனால் அந்த ட்வீட் வைரலாகியும் உள்ளது.  ‘சிலருக்கு கூகுளில் முறையாக தகவல்களை திரட்டுவது எப்படி என்று கூட தெரியவில்லை’ என்பது மாதிரியான கமெண்டுகளும் பறக்கின்றன. 

இதுவரை அந்த ட்வீட் 13200 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 2557 கமெண்டுகளும், 1,84,000 லைக்குகளையும் பெற்றுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.