சூர்யா பிறந்தநாளையொட்டி ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் சூர்யா புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. சூர்யா ரசிகர்களும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கேட்டு இயக்குநர் பாண்டிராஜிடம் கோரிக்கை வைத்துக்கொண்டே வந்தனர்.
இந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியானது. “எதற்கும் துணிந்தவன்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்புக்கேற்ப ஃபர்ஸ்ட் லுக் டீசரில் சூர்யா கெத்தாக நீண்ட வாளையும் துப்பாக்கியுடனும் வருகிறார்.
நேற்று ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று சூர்யாவின் பிறந்தநாளுக்காக இரண்டாம் லுக்கை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதிலும், கத்தியுடன் சூர்யா கர்ஜிக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM