அசோக் செல்வனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’: தனுஷ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

’ஓ மை கடவுளே’ வெற்றிக்குப் பிறகு நடிகர் அசோக் செல்வன் ‘தீனி’ என்ற படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து ‘ஹாஸ்டல்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்து வருகிறார். விஷால் வெங்கட் இயக்கும் இப்படத்தில் அஷோக் செல்வன், நாசர் மகன் அபி ஹாசன், நாசர்,கே.எஸ் ரவிக்குமார், மணிகண்டன், ரித்விகா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.


இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பை நடிகர் கமல்ஹாசன் இன்று அறிமுகப்படுத்திய நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM