புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், “தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதோடு, மேலும் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு

இதன்படி, தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமலில் இருக்கும் என்றும் அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்து அரசு துறை, தனியார் துறை அலுவலகங்கள் இயங்கலாம்.அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்துவித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 9 மணி வரை 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். சில்லரை மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் இயங்கலாம். பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி.

Also Read: புதுச்சேரி: ’ஜூன் 21 வரை தளர்வுடன்கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!’ எவற்றுக்கெல்லாம் அனுமதி?

அனைத்து வழிபாட்டுதலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு, புதுச்சேரி சுற்றுலா தளங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகின்றது. சுற்றுலாத் தளமான சுண்ணாம்பாறு படகு குழாம் போன்ற சுற்றுலா பகுதிகளில், 50 சதவீதம் பொது மக்களுடன் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது என அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.