இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிவரும் “ராம்பொத்தேனி 19’ படப்பிடிப்பு தளத்திற்கு, இன்று இயக்குநர் ஷங்கர் சர்ப்ரைஸ் விசிட் அடித்து படக்குழுவினருடன் உரையாடியுள்ளார்.

’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த இயக்குநர் லிங்குசாமி, தற்போது தமிழ், தெலுங்கில் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்பொத்தேனி ஹீரோவாகவும், வசூல் சாதனை படைத்த ‘உப்பெனா’ பட கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர்  சர்ப்ரைஸாக படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து லிங்குசாமி மற்றும் ராம் பொத்தேனியுடன் உரையாடி காஃபி அருந்தியுள்ளார். படக்குழுவினரும் இயக்குநர் ஷங்கருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றுள்ளனர்.

image

இயக்குநர் ஷங்கரும் தமிழ், தெலுங்கில் உருவாகும் ராம்சரணின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.