ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’?

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ’திட்டம் இரண்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கனா’ படத்திலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ‘திட்டம் இரண்டு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.

image

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், சோனி லைவ் ஓடிடி தளம் ‘திட்டம் இரண்டு’ படத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரில்லர் திகில் கதைக்களத்தைக் கொண்ட இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பை விரைவில் அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிடவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM