திருமணத்தை விட விவாகரத்தைதான் அதிகம் கொண்டாட வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அமீர் கானு விவாகரத்து குறித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான அமீர்கானும் அமீர்கானும் அவரது 2-வது மனைவி கிரண் ராவ்வும் இனி கணவன் மனைவியாக நீடிக்கப்போவதில்லை எனவும், பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில்” இந்த அழகான 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய உறவு நம்பிக்கையாலும், மதிப்பினாலும், காதலினாலும் வளர்ந்திருக்கிறது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவியாக நீடிக்கப் போவதில்லை” என தெரிவித்திருந்தனர்.

image

இதில் சமூக வலைத்தளங்களில் பலரும் அமீர்கானை பெரிதும் விமர்சனம் செய்து வந்தனர். அதாவது ஒவ்வொரு 15 ஆண்டுக்கு ஒருமுறை மனைவியை விவாகரத்து செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளவர் அமீர்கான் என கிண்டல் செய்து வந்தனர். ஆனால் அமீர்கானுக்கு ஆதரவாக இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவர் அமீர்கானை வைத்து இந்தியில் “ரங்கீலா” எனும் பெரும் வெற்றிப்படத்தை கொடுத்தவர். மேலும் ராம்கோபால் ட்விட்டரில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவிப்பதில் வல்லவர். இந்நிலையில் அமீர்கான் விவாகரத்து விவகாரத்தில் ராம்கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

image

அதில் “ஒருவரையொருவர் விவகாரத்தில் செய்வதில் அமீர்கானுக்கோ கிரண் ராவுக்கோ பிரச்னையில்லாதபோது மற்றவர்களுக்கு என்ன பிரச்னை என தெரியவில்லை. இதை கேலி செய்பவர்கள் எப்போதும்போல கேலி செய்துக்கொண்டே இருப்பார்கள் அது அவர்களின் வாடிக்கை. என்னைப்பொறுத்தவரை இந்தத் தம்பதியினர் மிகவும் கண்ணியமான முறையில் பிரிந்துள்ளார்கள். இருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கை இனி மிகவும் வண்ணமயமாகும். விவகாரத்து கொண்டாடப்பட வேண்டும். திருமணங்கள் முட்டாள்தனம் காரணமாக நடக்கிறது, ஆனால் விவாகரத்து அப்படியல்ல” என பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.