கொரோனா பேரிடரின் 2-ம் அலையை எதிர்கொண்டு வரும் சூழலில், ‘தென்னிந்தியாவைச் சேர்ந்த 5 மாநிலங்களில், எந்த மாநிலம் முதலில் மீண்டெழும்’ என்ற தலைப்பில் ‘வெபினார்’ ஒன்றை ஜூலை 2-ம் தேதி ‘ஃபோர்த் டைமென்ஷன் மீடியா’ ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் பேரிடர் நேரத்திலும்கூட, இணையம் வழியாக வகுப்புகள், கருத்தரங்குகள், ஆலோசனைகள் என அனைத்துமே நடந்துக்கொண்டிருக்கிறன. அந்தவகையில் மீடியா துறையை சார்ந்த சேல்ஸ் நிபுணர்கள், விற்பனையாளர்கள், க்ரியேட்டிவ் படைப்பாளிகள், ஒளி – ஒலி சார்ந்து இயங்கும் வல்லுநர்கள், ப்ராட்காஸ்ட் நிகழ்ச்சியாளர்கள் என பலரும் அதுபற்றிய அறிவை இணைய வழியில் பெற, மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

அவர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும்வகையில், ‘ஃபோர்த் டைமென்ஷன் மீடியா’ சார்பில் ‘வெபினார்’ எனப்படும் இணைய கருத்தரங்குகள் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின், இந்த வருடத்துக்கான முதல் இணைய வழி கருத்தரங்கான இதில், தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கான தலைப்பாக, ‘தென்னிந்தியாவைச் சேர்ந்த 5 மாநிலங்களில், எந்த மாநிலம் முதலில் மீண்டெழும்’ என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 2-ம் தேதி, மதியம் 2.30 மணியிலிருந்து, இந்த கருத்தரங்குகள் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள், பல நல்ல கருத்துகளை அறிந்தும் தெரிந்தும்கொள்ள முடியும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக, இந்நிறுவனத்தின் வெவ்வேறு தலைப்பு மற்றும் கருத்துகளின் கீழான கருத்தரங்கு மாநாடுகள் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில், சென்னை – கோவை – மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. 20200ம் ஆண்டு இணைய வழியாக, தமிழ்நாட்டைச் சார்ந்த தலைப்பில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. பின்னர் செப்டம்பரில் தெலங்கானா தொடர்பாகவும், டிசம்பரில் தென்னிந்தியா முழுமையும் உட்படும் விதத்தில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த கருத்தரங்குக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நோக்கில் தாங்கள் செயல்படுவதாக இந்நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

image

இந்த இணைய கருத்தரங்குக்கு, ஆர்.ஆர்.கேபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கீர்த்தி முதன்மைப் பேச்சாளராக இருப்பார். இவருடன் இன்னும் சில பேச்சாளர்கள் இணைவார்கள் எனத் தெரிகிறது.

பெருந்தொற்று நோய் வேகமாக பரவும் இந்த நேரத்தில் தென்னிந்தியாவில் தொழில் நிறுவனங்களும் அதன் நிபுணர்களும் எந்தளவுக்கு செயல்படுகின்றனர்? எந்த மாநிலம் முதன்மை மாநிலமாக இருக்கிறது? எந்த மாநிலம் விரைவில் கொரோனா அலை ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து மீண்டெழும் என்பது பற்றி கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

‘ஃபோர்த் டைமென்ஷன் மீடியா’வின் தலைமை நிர்வாக அதிகாரி சங்கர் கூறும்போது, “எங்கள் நிறுவனம் லைவ் நிகழ்வுகள் அல்லது வெபினார்கள் ஏற்பாடு செய்யும்போது, எங்கள் அனைவரின் மிகச்சிறந்த பங்களிப்பையும் அதற்கு தர நாங்கள் முயல்கிறோம். இதற்கு முன், கடந்த ஆண்டு இறுதியில் வெபினார் ஏற்பாடு செய்திருந்தோம். 6 மாதங்களுக்குப் பிறகு, இப்போது மீண்டும் களமிறங்கியிருக்கிறோம். இந்நிகழ்வின் மூலம், அடுத்து வரும் மாதங்களில் தென்னிந்தியா எப்படி முன்னேற்றம் அடையும் என்பது பேசப்படும். எங்கள் பேச்சாளர்கள், மிகச்சிறப்பான கருத்துகளை கூறுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்நிறுவனத்தின் சி.ஓ.ஓ பாரத் விஷ்வனாதன் பேசும்போது, “தென்னிந்தியா பற்றி பேசும்போது, எங்கள் நிறுவனத்தினர் அனைவருமே மிகவும் கவனமாகவும் உண்மையாகவும் இருப்போம். இந்த நிகழ்வில் எங்களின் புகழ்பெற்ற பேச்சாளர்கள் அதை மீண்டுமொருமுறை உலகுக்கு நிரூபிப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு நாடவேண்டிய இ-மெயில் முகவரி: shankar@fourdm.com

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.