புனேவில் ஆன்லைனில் லைசன்ஸ் பதிவுசெய்த கல்லூரி மாணவருக்கு பெண் போட்டோவுடன் உரிமம் கிடைத்ததால் குழப்பம் ஏற்பட்டது. 

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவுசெய்து பயிற்சி ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தொடங்கிவைத்தார். திட்டம் தொடங்கப்பட்ட முதல்நாளே புனேவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பயிற்சி உரிமத்துக்காக ஆன்லைனில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் உரிமம் கிடைக்கப்பெற்றபோது அதில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு பெண்ணின் புகைப்படம் மாறி வந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

புனேவேச் சேர்ந்தவர் ஆசிஷ் செடே. கல்லூரி முதலாமாண்டு பயின்றுவரும் இவர், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அன்று காலை 11 மணியளவில் Parivahan Sewa இணையதளத்தில் தனது ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை ஓட்டுநர் உரிமம் பெற பதிவேற்றி அதனுடன் ரூ.365ஐ கட்டணமாகவும் செலுத்தி இருக்கிறார். பிறகு பயிற்சி தேர்வுக்கு சென்றதில் 15க்கு 9 மதிப்பெண்கள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

image

இதன்பிறகு அவருக்கு இணையதளத்திலிருந்து உடனடியாக பயிற்சி ஓட்டுநர் உரிமம் கிடைத்திருக்கிறது. ஆனால் உரிமம் கிடைக்கப்பெற்றபோது அதில், அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக மற்றொரு பெண்ணின் புகைப்படம் இருந்ததால் அவர் உடனடியாக புனே ஆர்.டி.ஓ அலுவலகத்தை தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரித்திருக்கிறார்.

இதுபற்றி செடே, ’’இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதுதான். இணையதளம் இயங்குவதிலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் என்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்ததால் அதற்காக நான் சற்று அலையவேண்டி இருந்தது’’ என்று கூறுகிறார்.

இதுகுறித்து ஆர்.டி.ஓ அலுவலர் கூறுகையில், இணையதளம் இயங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு எதுவுமில்லை. ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை சேர்க்கும்போது ஏதேனும் குழப்பம் நேர்ந்திருக்கலாம். ஆனால் மொபைல் எண் இணைத்திருக்கும் ஆதார் கார்டுகளை கொண்டவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.