உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

அடுத்தாண்டு கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான ஆசிய அணிகள் தகுதி சுற்றுப் போட்டியில் தர வரிசையில் 105-ஆவது இடத்தில் உள்ள இந்திய அணியும், 149-ஆவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியும் இன்று மோதுிகன்றன. முன்னதாக இந்திய அணி கடந்த 7-ஆம் தேதி வங்கதேசத்திடம் மோதியது. அந்தப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி போட்டியின் 79-ஆவது மற்றும் 90-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

image

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் கால்பந்தாட்டப் போட்டி 1951-ல் நடைபெற்றது. அப்போது முதல் இரு அணிகளும் சர்வதேச அளவில் 9 முறை மோதியுள்ளன. அதில் இந்திய அணி 6 வெற்றிகளையும், ஆப்கானிஸ்தான் அணி 1 வெற்றியையும், 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

image

இன்றையப் போட்டிக்கான உத்தேச வீரர்கள் பட்டியல் – இந்தியா

குருப்ப்ரீத் சிங் சாந்து, சந்தேஷ் ஜிங்கான், சுபாஷிஷ் போஸ், சிங்லென்சானா கோன்ஷம், கிளான் மார்டின்ஸ், பிராண்டன் பெர்ணான்டஸ், உதாந்தா குமம், சுரேஷ் வாங்ஜம், பிநின் தோனாஜம், மன்வீர் சிங், சுனில் சேத்ரி.

ஆப்கானிஸ்தான்: ஓவைஸ் அசிசி, மாஸி சைங்கானி, சோஹிப் இஸ்லாம், ஷரிப் முகமது, டேவிட் நாஜெம், ஆடம் நாஜெம், நூர் ஹுசின், ஜூபாயர் அமிரி, பர்ஷத் நூர்ஸ பைசல் ஷாயெஸ்டே, அம்ரெதின் ஷரிபி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.