என்னுடன் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிப்பனே தவிர, எவருக்கும் வாய்ப்பளிக்காமல் மீண்டும் அழைத்து வரமாட்டேன் என்று இந்திய கிரிககெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ESPNCricinfo இணையதளத்துக்கு பேசியுள்ள ராகுல் டிராவிட் “நான் வீரர்களிடையே நேரடியாகவே சொல்லிவிடுவேன். கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்கு என்னுடன் வந்தால் விளையாட வாய்ப்பு அளிக்காமல் திரும்ப அழைத்து வரமாட்டேன். ஒரு சுற்றுப் பயணத்துக்கு சென்றுவிட்டு விளையாடமல் திரும்பி வருவது எத்தகைய கொடுமையான விஷயம் என்று நான் நன்றாகவே தெரியும். நானும் அதுபோல இருந்திருக்கிறேன். உள்நாட்டில் 700-800 ரன்களை குவித்துவிட்டு வெளிநாட்டில் விளையாடாமல் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் ஒருவரின் திறமை எப்படி தெரியும்? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

image

மேலும் பேசிய அவர் “ஆனால் ஒருமுறை நீங்கள் சிறப்பாக விளையாடிவிட்டு தேர்வாளர்கள் கவனத்துக்கு வந்துவிட்டால். அடுத்த சீசனிலும் 800 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழும். அதனை செய்வது எளிதான காரியமல்ல, பின்பு உங்களுக்கு உறுதியாக வாய்ப்பு கிடைக்குமா என்றாலும் தெரியாது. அதனால் 15 பேருடன் சுற்றுப் பயணம் சென்றால் எதிரில் இருக்கும் அணி எப்படியாக இருந்தாலும் சுழற்சி முறையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவேன். சில அண்டர் 19 போட்டிகளில் 5 முதல் 6 மாற்றங்கள் வரை செய்வேன்” என்றார் ராகுல் டிராவிட்.

image

தொடர்ந்து பேசிய டிராவிட் ” கடற்கைரயிலோ அல்லது சாலையிலோ விளையாடுவது உங்களை ஒரு முழு கிரிக்கெட் வீரராக்காது. இந்த விளையாட்டை காதலிப்பவர்கள் முறையான கிரிக்கெட் மேட்களிலும், பிட்சளிலுமே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அப்படி விளையாட்டை நேசிப்பவர்களுக்கு நல்ல மேட்டையும், பிட்சையும் உருவாக்கி தர வேண்டும். சரியான பயிற்களை கொடுக்க வேண்டும், அந்தப் பயிற்சியாளருக்கு உடற்பயிற்சியும் தெரிந்திருக்க வேண்டும். அரை குறையாக அனைத்திலும் இருந்தால் நல்ல வீரர்களை உருவாக்க முடியாது” என்றார்.

இறுதியாக பேசிய டிராவிட் “எங்களுடைய காலத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை. ஆனால் எங்களுக்கு தேடுதலும் அறிவுப் பசியும் அதிகம் இருந்தது. உடற் தகுதிக்கு கூட நாங்கள் ஆஸ்திரேலியர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்களை பார்ப்போம். அவர்களின் உடற்தகுதி பயிற்சியாளர்கள் இருந்தார்கள். ஆனால் எங்களுக்கு அப்படி ஏதும் கிடைக்கவில்லை. எங்களுக்கு சொல்லப்பட்டதெல்லாம் உடற்பயிற்சி கூடத்தில் அதிக நேரம் செலவிடாதே, அது உடம்பை இறுக்கி விடும். அதனால் பவுலிங் போடுவதும், ஓடவதும் மட்டுமே தெரியும்” என்றார் அவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.