நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று இரவு 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இத்தாலி அணியை எதிர்த்து துருக்கி அணி களம் காண்கிறது.

ஐரோப்பிய ஒன்றியங்களில் உள்ள நாடுகளை ஒன்றிணைத்து நடத்தப்படும் யூரோ கால்பந்து போட்டிகள் 1960 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இன்று இரவு 12.30 மணிக்கு யூரோ கால்பந்து போட்டிகள் தொடங்க உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டியைத் தொடர்ந்து உலகில் அதிக ரசிகர்கள் பார்க்கக் கூடிய இந்த யூரோ கால்பந்து போட்டி கடந்த 2020 ஆண்டு நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.

image

அதன்படி ஜுன் 11ஆம் தேதி தொடங்கும் இப்போட்டி ஜூலை 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்குபெறுகின்றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெறுகின்றன.அவை,

குரூப் A: துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து

குரூப் B: டென்மார்க், பெல்ஜியம், ரஷ்யா, பின்லாந்து

குரூப் C: நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, நார்த் மேசிடோனியா

குரூப் D: இங்கிலாந்து, குரேஷியா, ஸ்காட்லாந்து, செக் குடியரசு

குரூப் E: ஸ்பெயின், போலந்து, ஸ்வீடன், ஸ்லோவேகியா

குரூப் F: ஹங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி.

லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பெறும்; டாப் 2 அணிகளும், 3வது இடம் பிடித்த சிறந்த 4 அணிகள் என மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடும், அதில் வெற்றிபெறும் 8 அணிகள் காலிறுதி போட்டியிலும், பிறகு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

image

இன்று இரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதல் இப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்த்து துருக்கி அணி விளையாட உள்ளது. பலம் வாய்ந்த இத்தாலி அணியை எதிர்கொள்ளும் துருக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அனல் பறக்கும் இப்போட்டியில் முட்டல் மோதலுக்கு பஞ்சம் இருக்காது என்றே நம்பலாம்.

எம்.கலீல்ரஹ்மான்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.