கொரோனா சிகிச்சைக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், ஒரு கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லை என்னும் சூழல் இருந்தது. தற்போது சூழல் மேம்பட்டிருக்கிறது. சூழலை இன்னும் சரியாக்க, கொரோனா சிகிச்சைக்காக பிணையில்லாமல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்க பொதுத்துறை வங்கிகள் முன்வந்திருக்கின்றன.

எஸ்பிஐ வங்கித்தலைவர் மற்றும் இந்திய வங்கிகளின் சங்கதினர் ர்சேர்ந்து கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர். தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல் கொரோனா சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற கடன்களை வழங்க வங்கிகள் முடிவெடுத்திருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

தனிநபர்களுக்கு…

தனிநபர்கள் தங்களின் சிகிச்சை அல்லது குடும்பத்தின் சிகிச்சை செலவுக்காக இதுபோன்ற கடன்களை பெற்றுக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையிலும் கடன் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் கடனை திரும்பி செலுத்தும் காலம் அதிகபட்சம் ஐந்தாண்டுகள்தான். இந்த காலத்துக்குள் கடனை செலுத்தி முடிக்கவேண்டும். இந்த கடனுக்கு எஸ்பிஐ வங்கி 8.5 சதவீத வட்டியை நிர்ணயம் செய்திருக்கிறது. இதர பொதுத்துறை வங்கிகளும் கிட்டத்தட்ட இதே அளவில் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்திருக்கின்றன.

ஆனால், இந்தக் கடனை பெறுவதற்கு கடந்த 12 மாதங்களில் சம்பளம் அல்லது பென்ஷன் பெற்றவராக இருக்க வேண்டும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) திட்டத்தின் கீழ் இந்த கடன் எந்தவிதமான பிணையும் இல்லாமல் வழங்கப்படுகிறது. அதனால் கொரோனா சார்பாக கடன் வாங்குபவர்கள் சம்பள விவரத்தை தவிர வேறு எந்த சொத்து சார்ந்த ஆவணங்களையும் சமர்பிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்தது. இந்த தொகையில் இன்னும் ரூ.45,000 கோடி வரை கடன் வழங்கப்படாமல் இருக்கிறது. அதனால் இந்தத் திட்டத்துக்கான காலம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அல்லது மீதமுள்ள தொகை பயன்படுத்தும்போது இந்தக் கடன் திட்டம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

image

மருத்துவமனைகளுக்கு…

தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவமனைகளுக்கு கடன் வழங்க வங்கிகள் முடிவெடுத்திருக்கின்றன. மருத்துவமனைகள் அல்லது நர்சிங் ஹோம்களுக்கு அதிகபட்சம் ரூ.2 கோடி வரை கடன் வழங்க வங்கிகள் திட்டமிட்டிருக்கின்றன. ஆக்சிஜன் உற்பத்தி ஆலை கட்டுமானத்துக்கு வழங்கப்படும் இந்த கடனுக்கு 7.5 சதவீத வட்டியை வங்கிகள் நிர்ணயம் செய்திருக்கின்றன. இந்தக் கடனையும் ஐந்தாண்டுகளுக்குள் மருத்துவமனைகள் திருப்பி செலுத்த வேண்டும்.

ஹெல்த்கேர் நிறுவனங்களுக்கு…

மூன்றாவதாக ஹெல்த்கேர் நிறுவனங்களுக்கு கொரோனா காலத்துக்கு ஏற்ற கடனை வழங்க வங்கிகள் முன்வந்திருக்கின்றன. இதன்படி மருத்துவகட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மெட்ரோ நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.100 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி, வெண்டிலேட்டர் உள்ளிட்ட பல வகையான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தக் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடனை திருப்பி செலுத்துதற்கான காலமாக 10 ஆண்டுகளை வங்கிகள் நிர்ணயம் செய்திருக்கின்றன.

முதல் கட்ட நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.20 கோடியும், அடுத்தகட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.10 கோடியும் கடனாக வழங்க வங்கிகள் முடிவெடுத்துள்ளன.

இந்த மூன்று வகையான கடன்களுக்கும் கொரோனா பிரிவு கணக்கில் வரும் என்றும், இவை முன்னுரிமை கடன்களாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

– வாசு கார்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.