தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், எஞ்சிய பாடல்களும் இன்று வெளியாகி உள்ளன. இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சந்தோஷ் நாராயணன் இசைக்கு தனி ரசிகர்கூட்டம் இருப்பதால், இந்தப் பாடல்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் ‘ஜகமே தந்திரம்’ நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியாகியிருந்த நிலையில், வரும் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen to the full album of #JagameThandhiram here. I am very grateful for your motivation and support dear friends.
Tamil : https://t.co/haV5QSLiXw
Telugu : https://t.co/yYxbwjQcd7— Santhosh Narayanan (@Music_Santhosh) June 7, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM