இந்திய கிரிக்கெட் அணியின் சாஹா கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளார். அதனால் அவர் இங்கிலாந்துக்கு செல்ல உள்ள இந்திய அணியுடன் பயணிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட அவர், தற்போது கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் PTI செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருந்தார் அவர். பயோ பபுளில் இருந்த வீரர்களில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு ஆளான வீரர்களில் சாஹாவும் ஒருவர். அதையடுத்து அவர் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் அவர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணியில் சாஹாவும் தேர்வாகி உள்ளார். இருந்தாலும் அவர் தொடரில் விளையாட அவரது உடல் திறனை நிரூபிக்க வேண்டி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM