கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.

 கடந்த ஒரு மாதமாக ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.


இந்நிலையில், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். அதில், ”நாம் அனைவரும் இணைந்து கொரோனா வைரஸை வென்றெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM