ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்மணி கியி மெசியின் (Gie Mcyen). இவர் அண்மையில் டான்சிலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதனால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள். சிகிச்சை முடிந்த வழக்கம் போல அவர் பேச முயன்ற போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சி தெரியவந்துள்ளது. அது அவரது வார்த்தை உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றம். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் ஐயர்லாந்து நாட்டுக்காரரை போல வார்த்தைகளை உச்சரிப்பதை கண்டறிந்துள்ளார். 

“முதலில் நான் சிகிச்சை காரணமாக அப்படி பேசினேன் என எண்ணினேன். ஆனால் சில நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நான் பேசிய போது எனது வார்த்தை உச்சரிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து சுட்டிக்காட்டினர். நான் மருத்துவர்களை உடனடியாக அணுகினேன். அப்போது மருத்துவர்கள் எனக்கு Foreign Accent Syndrome என்ற குறைபாடு ஏற்றிருக்கலாம் என தெரிவித்தனர். ஆக மொத்தம் ஆஸி மண்ணில் பிறந்து இங்கேயே வளர்ந்த நான் இப்போது ஐயர்லாந்து நாட்டை சேர்ந்தவரை போல பேசி வருகிறேன். ஒவ்வொரு நாள் விடியும் போதும் எனது பழைய உச்சரிப்பு திரும்பும் என்ற நம்பிக்கையுடன் தான் கண் விழிக்கிறேன். ஆனால் அது கைகூடவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். 

முதன்முதலில் 1907வாக்கில் இந்த Foreign Accent Syndrome குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை வெறும் 100 வழக்குகள் மட்டுமே இந்த குறைபாத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.