சென்னையில் அம்மா உணவகத்தை சூறையாடிய இரண்டு திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்திற்குள் இன்று காலை திமுகவைச் சேர்ண்ட இருவர் சூறையாடினர். உணவகத்தில் இருந்த அம்மா உணவகம் பெயர் பலகைகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் உள்ளிட்டவற்றை கிழித்து வீதியில் எறிந்தனர். பின்னர் அவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் உணவகத்தில் இருந்து உணவுப் பொருட்களையும் சேதப்படுத்திய வீடியோ இணையத்தில் பரவி வைரலானது.

இதனையடுத்து, தவறு செய்தவர்கள் திமுகவினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், அம்மா உணவகம் என்பது அரசு உணவகம், அதை சேதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து, திமுகவைச் சேர்ந்த நவ சுந்தர், சுரேந்திரன் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருந்தார்.

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsubramanian.ma%2Fvideos%2F308453093989293%2F&show_text=false&width=267″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

image

இந்நிலையில், திமுக புகார் செய்ததால் 2 பேரையும் நொளம்பூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அம்மா உணவகத்தில் கிழித்து எறியப்பட்ட பிளக்ஸ் பேனர் மீண்டும் அதே இடத்தில் ஒட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்… <a href=”https://t.co/8FjmbSzTgS”>pic.twitter.com/8FjmbSzTgS</a></p>&mdash; Subramanian.Ma (@Subramanian_ma) <a href=”https://twitter.com/Subramanian_ma/status/1389486753887621120?ref_src=twsrc%5Etfw”>May 4, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.