மனிதர்களை தொடர்ந்து, விலங்குகள் மத்தியிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியிருக்கிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அளித்துள்ள தரவுகளின்படி, ஆசிய சிங்கங்களின் மரணம், கொரோனாவால் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் நோய் பரவுதலை தவிர்க்க, தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் விலங்குகள் நடமாடும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் மூட வேண்டும் என்று அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

image

மேலும் காடுகளில் மனிதர்களின் நடமாட்டத்தை குறைக்கும்விதமாக செயல்படவிருப்பதாக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அங்கே பணி செய்யும் நபர்கள் அனைவரும், கொரோனா நெகடிவ்வாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடையும் அமைச்சகம் விதித்துள்ளது.

விலங்குகளின் அன்றாட செயல்பாடுகளில் ஏதேனும் வித்தியாசம் தெரியவந்தால், உடனடியாக அவற்றை கவனிக்க வேண்டுமென்றும், மேற்கொண்ட சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் முதல் நிலை பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டுமெனக்கூறியுள்ள அமைச்சகம், அதற்கு தேவையான அனைத்து பொருள்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இவற்றோடு சேர்த்து, அனைத்து மாநிலங்களுக்கும், விலங்குகளுக்கான அவசர சிகிச்சை முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மனிதர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் கொரோனா, இப்போது விலங்குகளுக்கும் பரவத்தொடங்கியிருப்பது, அரசுக்கு கூடுதல் அச்சத்தை கொடுத்திருக்கிறது.

image

இந்தியா மட்டுமன்றி, வேறு சில நாடுகளிலும் விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பல நாடுகளில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணி நடந்துவருகிறது. ரஷ்யாவில், கடந்த மாதம் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி பதிவு செய்யப்பட்டிருந்தது. நரிகள், நாய்கள், பூனைகள் போன்றவற்றின் மீது நடத்தப்பட்ட அந்த சோதனையின் முடிவில், நல்ல பலன் தெரியவந்ததால், அதை விலங்குகளுக்கு போடும் பணி அங்கே தொடங்கியுள்ளது.

ஜெர்மனி, க்ரீஸ், போலாந்து, ஆஸ்திரியா, கஜகஸ்தான், தாஜிகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, ஈரான், அர்ஜெண்டினா போன்ற பல நாடுகள், ரஷ்யாவின் இந்த தடுப்பூசியை தங்கள் நாட்டுக்கு வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன. இந்த வரவேற்புகளை தொடர்ந்து, மருந்து உற்பத்திக்கு, முதல் தொகுப்பாக 17,000 தடுப்பூசி உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.