சத்தீஸ்கரில் ஐந்து மாத கர்ப்பிணியான டிஎஸ்பி ஷில்பா சாஹு, கொரோனா விதிமீறல்களில் ஈடுபடும் மக்களை நெறிப்படுத்தும் பணிகளில் திவிரமாக ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பேரிடர் பெரிய சோகங்களையும், பல நம்பிக்கைகளையும், உண்மைகளையும், கடமையாளர்களையும் நமக்கு நிறையவே காட்டி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரில் உள்ள டான்டேவாடாவில் இருந்துதான் அந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி பொதுமக்கள் வெளியே வரும் நிலையில், அவர்களை பெண் டிஎஸ்பி ஷில்பா சாஹு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்து வருகிறார். அவர் ஐந்து மாத கர்ப்பிணியும் கூட.

தன்னுடைய, தன் வயிற்றில் குழந்தையின் உடல்நலம் குறித்து கவலைப்படாமல், கடமையே முக்கியம் என்று கடுமையான வெயிலில் நின்றுகொண்டு பணிகளை கவனித்து வருகிறார் டிஸ்பி ஷில்பா சாஹு. கடுமையான கொரோனா சூழலிலும் வீட்டில் இருக்காமல் கடமையை செய்துவரும் ஷில்பா சாஹுவின் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து அவருக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

சத்தீஸ்கர் டிஜிபி டி.எம்.அவஸ்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஷில்பா இந்த நிலையில்கூட பணிபுரிகிறார்… அவர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்… அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டு. ஷில்பா சத்தீஸ்கர் போலீசாரின் சொத்து” என்று குறிப்பிட்டுள்ளார்.

She is DSP Shilpa Sahu of Dantewada @CG_Police .
She is working even at this stage !
She has done outstanding work in naxal operations too.

Proud to have such outstanding police officers @CG_Police .

My heartiest appreciation for her. She is an asset of Chhattisgarh police! pic.twitter.com/vLWuquhI3X
— D M Awasthi IPS (@dmawasthi_IPS86) April 21, 2021

ஷில்பாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், காவல்துறை மற்றும் அரசை நோக்கி நெட்டிசன்கள் சில கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அவருக்கு விடுமுறை கொடுத்திருக்க வேண்டும் அல்லவா, அதை விடுத்து, அவரை பணி செய்ய வைப்பது என்ன வகையான நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு ட்விட்டர் பயனர், “இது தவறு. அவர் இதைச் செய்யக்கூடாது. புகழ்வதற்குப் பதிலாக எல்லா மரியாதையுடனும் ஷில்பா விடுப்பு அறிவுறுத்தப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதேபோன்று ஒரு வீடியோ வைரலாகியது. சண்டிகரில் ஒரு போக்குவரத்துக் காவலர் தனது குழந்தையை தனது கைகளில் சுமந்துகொண்டு பணிபுரிந்தது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.