சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 15வது லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட் செய்த சென்னை அணி இருபது ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை குவித்துள்ளது. 

சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளசிஸ் இன்னிங்ஸை ஓப்பன் செய்திருந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அது சென்னைக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. 


33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் ருதுராஜ். அதன் மூலம் நடப்பு சீசனில் பார்முக்கு திரும்பியுள்ளார் அவர். 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி வெளியேறினார் அவர். 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 


பின்னர் மொயின் அலி களத்திற்கு வந்தார். மறுபக்கம் டூப்ளசிஸ் தன் பங்கிற்கு 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். இருப்பினும் மொயின் அலி 12 பந்துகளில் 25 ரன்களை குவித்து வெளியேறினார். நரைன் சுழலில் பெரிய ஷாட்டுக்கு முயன்று மிஸ் செய்ததாதல் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் செய்து அவரை வெளியேற்றினார். 


அதன் பின்னர் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கினார் தோனி. 8 பந்துகளில் 17 ரன்கள் குவித்து வெளியேறினார் தோனி. அதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் அடங்கும். இந்த இன்னிங்ஸில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 212.50 ஆகும். தொடர்ந்து ஜடேஜா களத்திற்கு வந்தார். இறுதி வரை களத்தில் அவுட்டாகாமல் இருந்த டூப்ளசிஸ் 60 பந்துகளில் 95 ரன்களை குவித்தார். ஜடேஜா கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை குவித்தது. 

இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 221 ரன்கள் தேவை. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.