வரும் ஜுன் மாதத்தில் இருந்து அனைத்து நகைகளும் பிஐஎஸ் முத்திரையுடன் விற்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் மத்திய நுகர்வோர் நலத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அனைத்து நகைக்கடை வியாபாரிகளும் தங்களின் நகைகளுக்கு பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த முத்திரையின் வாயிலாக தங்கத்தின் தூய்மை உறுதிசெய்யப்படும்.

image

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகளின்படி, தங்கநகைகளை பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையில்லாமல் விற்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை சரிவர கடைப்பிடிக்காத விற்பனையாளர்கள், விற்ற நகைக்கு நிகராக ஐந்து மடங்கு அபராதம் அல்லது ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

image

இது குறித்து இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) இயக்குநர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி கூறும்போது,“ பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு தற்போது வரை 34,647 தங்க நகை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்தப்பதிவு எண்ணிக்கை அடுத்த இரண்டு மாதங்களில் 1 லட்சமாக அதிகரிக்கும் என நம்புகிறோம்.

இந்த நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும். பிஐஎஸ் முத்திரையை பெறுவதற்கான அத்துனை நடைமுறையும் தானியங்கு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு ஊக்கத்தொகையாக பிஐஎஸ் முத்திரை பெறுவதில் 50 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.