பென்னாகரம் அடுத்த போடூர் சின்னாற்று வனப்பகுதியில் மக்னா யானை மர்மமான முறையில் உயிரிழந்து துர்நாற்றம் வீசி வருகிறது. யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தொடர்ந்து கோடை காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதும் உண்டு. இந்நிலையில் ஒகேனக்கல் அடுத்த சின்னாற்றுப் படுகை பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை ஒன்று உயிரிழந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் இதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

image

தகவல் அறிந்து வனப்பகுதிக்கு வந்த, ஒகேனக்கல் வனச்சரக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது இறந்து கிடந்தது மக்னா யானை வகையைச் சேர்ந்தது என்றும், தந்தம் இல்லாத சுமார் 30 வயதுடையது எனவும் தெரியவந்தது. இந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே இறந்துள்ளதால், உடல் பருத்து அழுகி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் யானை உயிரிழந்ததற்கான காரணம் அறிய கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

image

சின்னாற்று வனப்பகுதியில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழந்து வருவதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். யானைகள் இறப்பை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.