ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி இருக்கிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்க நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

image

எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாகிறது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளையொட்டி ‘தலைவி’ படத்தின் ட்ரைலர் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது.

image

இந்நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடலான ‘மழை மழை’ பாடல் வெளியாகி இருக்கிறது. பாடலில் ரோஸ் கலர் உடையில் கலர்ஃபுல்லாக தாமரை குளத்தின் நடுவில் நடனம் ஆடும் கங்கனா கவனம் ஈர்க்கிறார். அதோடு, கங்கனாவின் காஸ்டியூம்களும் நடனம் அமைத்த இடமும் பார்க்க பார்க்க மனதை கொள்ளைக் கொள்கிறது. 

image

’மழை, அருவி, தாமரைப்பூக்கள் அழகு என்றால், இவை அத்தனையை விடமும் பேரழாக உள்ளன கங்கனா ரனாவத்தின் எக்ஸ்பிரஷன்கள். ஆனால், பாடியவருக்கும் கங்கனா வாயசைப்பதற்கும் சம்மந்தமே இல்லாமல் இருப்பதுபோல் உள்ளது’ என்கிறார்கள் நெட்டிசன்கள்.

image

இந்த அழகான பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார் பிருந்தா மாஸ்டர். அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பாடலில் பணியாற்றியது குறித்து பெருமையுடன் நன்றி சொல்லியிருக்கிறார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Chali Chali (Full Song) THALAIVI | Kangana Ranaut | Vijay | GV Prakash K… <a href=”https://t.co/kAQy3BfLih”>https://t.co/kAQy3BfLih</a> via <a href=”https://twitter.com/YouTube?ref_src=twsrc%5Etfw”>@YouTube</a> It was wonderful choreographing this beautiful song and working with the talented and gorgeous Kangana Ranaut. Thank you Vijay sir .@KanganaTeamsupern</p>&mdash; Brindha Gopal (@BrindhaGopal1) <a href=”https://twitter.com/BrindhaGopal1/status/1377917481948340229?ref_src=twsrc%5Etfw”>April 2, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.