தேர்தல் பரப்புரைக்காக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்திருந்தார். இதற்காகத் தனி விமானம் மூலம் லக்னோவிலிருந்து கோவை விமான நிலையம் வந்த யோகி, புலியகுளம் பகுதியில் பா.ஜ.க இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கிவைக்க வந்தார். அப்போது, புலியகுளம் விநாயகர் கோயிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

யோகி ஆதித்யநாத்

இதையடுத்து பேரணியைத் தொடங்கிவைத்து யோகியும் வானதியும் அங்கிருந்து ராஜவீதி வரை செல்ல ஒரு வாகனத்தைப் பிரத்யேகமாகத் தயார் செய்திருந்தனர். ஆனால், யோகி ஆதித்யநாத் அந்த வாகனத்தில் ஏற மறுத்துவிட்டார்.

Also Read: உ.பி : `கடந்த 6 ஆண்டுகளாக மோடி விவசாயிகளுக்காகப் பாடுபட்டுவருகிறார்’ – யோகி ஆதித்யநாத்

“வாகனத்தில் ஏறி கை மட்டுமாவது அசையுங்கள்” என வானதி கேட்டுக்கொண்டார். சற்று யோசித்துவிட்டு யோகி வாகனத்தில் ஏறி கையசைத்துவிட்டு, காரில் ஏறி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றுவிட்டார். ஆனால், யோகி மேடை ஏறியபோது அங்கு பெரிய அளவுக்குக் கூட்டம் சேரவில்லை.

பேரணி
யோகி ஆதித்யநாத்

வெயிலும் கடுமையாக வாட்டிக்கொண்டிருந்ததால் அங்கிருந்த சிலரும் நிழலில்தான் நின்றுகொண்டிருந்தனர். இதனால் மேடையில் இருந்தவர்கள், “நிறைய இடம் காலியா இருக்கு. தயவு செஞ்சு முன்னாடி வந்து உட்க்காருங்க. வெயிலையெல்லாம் பார்க்காதீங்க. அப்புறம் நாம ஜெயிக்கவே முடியாது” என்று கெஞ்சாத குறையாகக் கூறினர்.

சிறிது நேரம் கழித்து பேரணியில் இருந்தவர்கள் வந்த பிறகுதான் ஓரளவுக்குக் கூட்டம் கூடியது. அதிலும் வட இந்தியர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. மேடை ஏறிய பிறகு, வானதி சீனிவாசன், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். மேடையின் முன் பகுதியிலிருந்த ஆர்ச்சில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

பொதுக்கூட்ட மேடை
வானதி, யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் படம் மிஸ்ஸிங். மேடையில் ஒரு ஓரமாகத்தான் மோடி படம் இடம்பெற்றிருந்தது. ஏ.பி.முருகானந்தம் மொழிபெயர்க்க, கடைசியாக மைக் பிடித்தார் யோகி ஆதித்யநாத்.

வழக்கம் போல், “தி.மு.க – காங்கிரஸ் கட்சியினர் பெண்களுக்கு எதிரானவர்கள். அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்திலிருந்து ரூ.120 கோடி நிதி வந்திருக்கிறது. மோடியின் பார்வை தமிழகத்தில்தான் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா நோய் முறியடிக்கப்பட்டு, அதன் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் கூட்டம்

வானதி சீனிவாசனை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்” என்று பேசினார். தனது பேச்சில் இரண்டு இடங்களில் வேலுமணியின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்காகவும் யோகி பிரசாரம் செய்தார்.

யோகி ஆதித்யநாத் வருகைக்காக கோவை மாநகரின் பல முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் சிரமப்பட்டனர். பா.ஜ.க இருசக்கர வாகன பேரணியின்போது, டவுன்ஹால் பகுதியில் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. அதன்படி, சிலர் அங்குள்ள மசூதி அருகே வெறுக்கத்தக்க வகையில் கோஷங்கள் எழுப்பியதாகவும்,

பேரணி தகராறு

அங்கிருந்த கடைகளை மூடச்சொல்லி தகராறு செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளர் வஹாப், வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகாரளித்துள்ளார்

நாம் தமிழர் புகார்
நாம் தமிழர் புகார்

இந்தநிலையில், அனுமதியின்றி இரு சக்கரப் பேரணியில் ஈடுபட்டதற்கும், அங்கிருந்த கடை மீது கல்வீசியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.