தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, 234 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணி. மோடியால் இந்த நாடு உயர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான உறவு இருக்க வேண்டும். மத்திய அரசோடு இணக்கமான உறவு இருந்தால்தான் திட்டங்கள் வரும். 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளோம். 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்துள்ளோம்” என்றார்.