ஐபிஎல் டி20 தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணியின் நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட்டார்.

? ANNOUNCEMENT ?

Rishabh Pant will be our Captain for #IPL2021 ✨@ShreyasIyer15 has been ruled out of the upcoming season following his injury in the #INDvENG series and @RishabhPant17 will lead the team in his absence ?#YehHaiNayiDilli
— Delhi Capitals (@DelhiCapitals) March 30, 2021

இந்தாண்டும் அவரை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் காயத்தில் இருந்து குணமாக தாமதமாகும் என்பதால் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமித்துள்ளது நிர்வாகம். ஆஸ்திரேலிய தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரிஷப் பன்ட்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.