தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுபவர் ’வெற்றிவேல் வீரவேல்’ என்று தமிழில் உரையுடன் தொடங்கியுள்ளார்.

தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரளாவின் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். இந்தக் கூட்டத்தில்  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டு பேசினர்.

பிரதமர் மோடி பேசும் போது “தமிழகத்துடைய இந்த பழமையான இந்த நகரத்துக்கு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சுவாமி அகஸ்தீஸ்வரர் அருளாசி அளவிடக்கரியது. உலகம் முழுக்க மக்கள் அந்த கோயிலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி மிகச்சிறந்த மனிதர்களான திருப்பூர் குமரன், காளிங்கராயர், தீரன் சின்னமலை, தளபதி கொல்லன் போன்ற மிகச் சிறந்த மனிதர்களை கொடுத்தப் பகுதி, தமிழகத்தின் கலாச்சாரத்தில் இந்தியா பெருமைக் கொள்கிறது” என்று பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.