கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றரை வயதுக் குழந்தை மோனிஷா, முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட அரிதான பாதிப்பால் (Lumbar Meningomyelocele) சிரமப்படுகிறார். தொடைக்குக் கீழே இரண்டு கால்களிலும் உணர்வுகள் இல்லாத மோனிஷாவுக்கு, சிறுநீர் கழிப்பதிலும் விவரிக்க இயலாத துன்பங்கள். இந்தச் சிறுமியால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாது. இதனால், மோனிஷாவின் தொடையில் எந்நேரமும் யூரின் டியூபை கட்டிவிட்டுள்ளனர்.

மோனிஷா

மகளின் மருத்துவச் செலவுக்கு மாதம் 2,500 ரூபாய் செலவாகும் நிலையில், குடும்பப் பொருளாதாரச் சூழல் அதற்குத் தடையாக இருக்கிறது. இதனால், மோனிஷாவின் பெற்றோர் பெரும் துயரில் தவிக்கின்றனர். சிறுமியின் நிலை குறித்து கடந்த மாதம் விகடன் இணைய தளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். விகடன் வாசகர்கள் பலரும் உதவி செய்தனர். இதுவரை 1,77,000 ரூபாய் நிதியுதவி கிடைத்திருக்கிறது. இந்தத் தொகை நிரந்தர வைப்பு நிதியாக (fixed deposit) வங்கிக் கணக்கில் சேர்க்கப்படவிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை, மோனிஷாவின் மாதாந்தர சிகிச்சைக்கு உதவும்.

நிதியுதவி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள மோனிஷாவின் அம்மா வசந்தி, “குழந்தைக்கு யூரின் பால் மாதிரி வரும் பிரச்னைதான் எங்களை ரொம்பவே அச்சப்படுத்துது. யூரின் டியூப், கத்தீட்டர், பிரத்யேக ஷூ, இதர செலவுகள்னு குழந்தையோட சிகிச்சைக்கு எங்க நிலைமைக்கு மீறி செலவாகுது. இதனால, ஒவ்வொரு முறையும் ஆஸ்பத்திரிக்குப் போறப்போ 500 ரூபாய்க்கும் பல பேர்கிட்ட கடன் கேட்டு தவிப்பேன். மகளை எப்படி வளர்த்து ஆளாக்கப்போறோம்னு கவலையாவே இருந்தோம்.

DONATORS

ரொம்பவே கஷ்டத்துல இருந்தப்போதான், விகடன்ல பொண்ணு பத்தின பேட்டி வெளியாச்சு. உடனே உதவிகள் வர ஆரம்பிச்சது. இவ்வளவு உதவி வரும்னு நாங்க எதிர்பாக்கல. கிடைச்சிருக்கும் பண உதவியால ரொம்பவே நம்பிக்கை ஏற்பட்டிருக்கு. நானும் என் கணவரும் உயிரோடு இருக்கும் காலம் வரை மகளை நல்லபடியா பார்த்துப்போம். அதுக்கான நம்பிக்கையை, இப்போ உதவி செய்த நல் உள்ளங்கள் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்காங்க. அவங்க எல்லோருக்கும் கண்ணீருடன் நன்றி தெரிவிச்சுக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாக முடித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.