தஞ்சை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை உள்ளதால் பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் போட்டு வர வேண்டும் என்றும் விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு அவை மூடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் எச்சரித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோக பணிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், இப்பணி இன்னும் ஐந்து நாட்களில் நிறைவடையும் என்று தெரிவித்தார். அப்போது தஞ்சை மாவட்டத்தில் தேர்தலை சுமூகமாக நடைத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

image

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தஞ்சை மாவட்டம் சென்னை நகரோடு வணிக ரீதியாக அதிக அளவு தொடர்பு உள்ளதாலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட இருந்ததாலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் படிப்படியாக குறைந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 16 பள்ளிகளில் 217 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருந்த நிலையில் 197 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் நலமுடன் உள்ளனர்.

தஞ்சையில் கொரோனாவின் இரண்டாவது அலை உள்ளது. முதல் அலையின் போது தஞ்சை மாவட்டத்தில் எப்படி பொதுமக்கள் அதிக அளவு பரவாமல் ஒத்துழைப்பு கொடுத்தார்களோ அதேபோல பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முக்கிய நிகழ்வுகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். தஞ்சை மாவட்டத்தில் பொது இடங்களில் விதி மீறியதாக இதுவரை 26 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

image

பொதுமக்கள் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தை புரிந்துகொண்டு முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நிறுவனம் மூடப்படும். தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக தஞ்சை ஒரத்தநாடு கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.