மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புர்க்கினா பாசோ நாட்டை சேர்ந்தவர் 70 வயது மதிக்கத்தக்க Yacouba Sawadogo. விவசாயியயான அவர் தனது பகுதியில் மழை பொய்த்து போனதால் பாலைவனமாக மாறிப் போன வறண்ட நிலப்பரப்பை பூங்காவனமாக மாற்றியுள்ளார். பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றி ZAI Holes என்ற நுட்பத்தை கடைபிடித்து வறண்ட பூமிக்குள் விதைகளை முளைக்கச் செய்துள்ளார். சுமார் 40 ஆண்டு காலம் இதற்கென விடாமுயற்சியுடன் அவர் உழைத்துள்ளார்.
அதன் பலனாக 62 ஏக்கர் பரப்பளவு கொண்ட வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றியுள்ளார். தற்போது அந்த தொழில்நுட்பத்தை பலருக்கும் பரிச்சயம் செய்து வருகிறார் அவர்.

image
1970 மற்றும் 80 வாக்கில் தனக்கு அக்கம் பக்கம் வசித்த மக்கள் எல்லாம் வறட்சி காரணமாக ஊரை காலி செய்து புறப்பட்டு சென்ற நிலையில் தனியொரு ஆளாக நின்று அந்த பகுதியை வனமாக மாற்றியுள்ளார் அவர். இதன் மூலம் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளில் உணவு பாதுகாப்பு, நிலத்தடி நீர் மட்டம், பல்லுயிர் பெருக்கமும் அதிகரித்து வருவதாக கடந்த 2018 இல் வெளியான ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.