உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவாரருக்கு மார்ச் 31ஆம் தேதி அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்.சி.பி கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதில், ‘’எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் வலி இருப்பதாகக் கூறிய அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கூட்டிச் செல்லப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது தெரியவந்தது. எனவே வருகிற 31ஆம தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது. எனவே அடுத்த அறிவிப்பு வரும்வரை பவாரின் நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.
NCP chief Sharad Pawar (in file pic) was feeling a little uneasy due to a pain in his abdomen last evening & was therefore taken to Breach Candy Hospital (in Mumbai) for a check-up. Upon diagnosis, it came to light that he has a problem in his Gallbladder: NCP leader Nawab Malik pic.twitter.com/L337FzeMGN
— ANI (@ANI) March 29, 2021
இரண்டு நாட்களுக்குமுன்பு சரத் பவார் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடையேயான சந்திப்பு குஜராத்தில் நடைபெற்றது. பவார் இதற்குமுன்பே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM