வண்ணங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், சினிமா பிரபலங்கள் பலர் கொரோனா சூழலிலும் உற்சாகமுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதன்
நடிகை ஜெனிலியா தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக்குடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார்.
கங்கனா ரனாவத் தனது நண்பர்களுடன் ஹோலி கொண்டாடியுள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதல் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
அக்ஷய் குமார் தனது மகளுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சமீரா ரெட்டி குழந்தைகளுடன் கொண்டாடிய புகைப்படம் மனதை கொள்ளைக் கொள்கிறது.அதேபோல, நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் கொண்டாடியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM