இந்தியில் தனுஷ் நடித்துள்ள ‘அட்ராங்கி ரே’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ளது.

‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களை தொடர்ந்து தனுஷ் மூன்றாவதாக இந்தியில் நடித்துள்ள படம் ‘அட்ராங்கி ரே’. சாரா அலிகான், அக்‌ஷய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுவாக முடிந்துள்ளது. இது குறித்தான தகவலை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராய் மற்றும் தயாரிப்பாளர் ஹிமான்ஷு சர்மா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிடடு, அட்ராங்கி ரே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. உங்கள் இருவருக்கும் எனது அன்பு.. என்று குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Dhanush (@dhanushkraja)


முன்னதாக படம் முடிவடைந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய நடிகை சாரா, “ எனக்கு இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்த ஆனந்த் எல்.ராய்க்கு நன்றி. எனக்கு உதவிகரமாக, உத்வேகமாக, முன்மாதிரியாக இருந்த தனுஷூக்கு நன்றி. இந்தப் பயணத்தில் அவரை விட சிறந்த கூட்டாளி கிடைத்திருக்க முடியாது. சிறந்த இசை, தென்னிந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி எனக் குறிப்பிட்ட அவர், நடிகர் அக்‌ஷய் குமாருக்கும் நன்றி தெரிவித்தார்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.