தனது தந்தையை மருத்துவ கொலை செய்துவிட்டதாக, காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை திமுகவின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சீனிவாச பெருமாளை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பொழுது மேட்டூர் அருகே காவேரி நகர் பகுதியில் பேசிய விருதாம்பிகை, “வன்னியர் அறக்கட்டளை என்பதனை எனது தந்தை குரு இறந்த பிறகு ராமதாஸ் அறக்கட்டளை என மாற்றியுள்ளனர். எனது தந்தை உயிருடன் இருக்கும்போதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் வசூல் செய்தனர். ஆனால் மருத்துவமனை செலவுக்கு வசூல் செய்த பணத்தில் பாதி கூட செலவு செய்யவில்லை.
எனது தந்தை மருத்துவமனையில் இருந்தபோது 48 நாட்கள் மயக்க ஊசி போட்டு நினைவு திரும்பாத படி மருத்துவ கொலை செய்தனர். எனது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது என்னையும் எனது குடும்பத்தாரையும் பார்க்க விடாமல் செய்தனர். ராமதாஸ் எனது தந்தையை மூத்த மகன் என்று தெரிவித்தார். ஆனால் இறந்த பிறகு வீடு தேடி வந்து ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை. பாமக போராட்டத்தின் போது 21 பேரை சுட்டுக் கொன்றது அதிமுக அரசு. ஆனால் அவர்களுடன் நீங்கள் எப்படி கூட்டணி வைத்துள்ளீர்கள்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM