ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’,‘காலா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.குத்துச்சண்டையை கதைக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகனாக ஆர்யாவும், கதாநாயகியாக துஷாரா விஜயனும் நடிக்கின்றனர்.
முக்கிய கதாபாத்திரங்களில் கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முன்னதாக இந்தப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில், நேற்று இந்தப்படம் தொடர்பாக தகவல் வெளியிடப்படும் என இயக்குநர் பா.ரஞ்சித் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
Introducing the characters of #sarpatta
Stay tuned!!!#இது_நம்ம_களம் @arya_offl @Music_Santhosh @K9Studioz @officialneelam @EditorSelva #muraliG #tha_Ramalingam @anbariv @pro_guna @urkumaresanpro pic.twitter.com/OgrlviKDCh— pa.ranjith (@beemji) March 27, 2021
அதன் படி தற்போது சார்பட்டா பரம்பரை படத்திலிருந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி ஆர்யா கபிலனாகவும், ஜான் கொக்கன் வேம்புலியாகவும், கலையரசன் வெற்றிச்செல்வனாகவும், சந்தோஷ் ராமனாகவும், பசுபதி ரங்கன் வாத்தியாராகவும், துஷாரா விஜயன் மாரியம்மாவாகவும், காளி வெங்கட் கோனி சந்திரனாகவும் படத்தில் நடித்துள்ளனர். அத்துடன் ஆர்யா உட்பட நடிகர்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவது போன்ற காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.