இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 48.2 ஓவர் முடிவில் 329 ரன்களை 10 விக்கெட் இழப்பிற்கு குவித்துள்ளது. தவான், பண்ட், ஹர்திக் பாண்ட்யா மாதிரியான பேட்ஸ்மேன்கள் அசத்தலாக ஆடி இருந்தனர். மூவரும் அரை சதம் கடந்து அவுட்டாகினர்.
ரோகித் – தவான் 100 ரன்களுக்கு மேலும், பண்ட் – ஹர்திக் இணையர் 99 ரன்களுக்கு மேலும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் பண்ட் – ஹர்திக் பார்ட்னர்ஷிப் இக்கட்டான சூழலில் அமைக்கப்பட்டது. 350 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் இந்தியா ஆல் அவுட்டாகி அதை தவற விட்டது.
200 up for #TeamIndia
Live – https://t.co/wIhEfE5PDR #INDvENG @Paytm pic.twitter.com/v9DhESFnSB
— BCCI (@BCCI) March 28, 2021
இங்கிலாந்து அணிக்காக பந்து வீசிய பந்து வீச்சாளர்கள் அனைவரும் விக்கெட் வீழ்த்தி இருந்தனர். மொயின் அலி மற்றும் மார்க் வுட் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.
Tenacious work in the heat ☀
We bowl India out for 329.
Scorecard: https://t.co/Tg8Rv22GYW
?? #INDvENG ??????? pic.twitter.com/j1LGkTkOgs
— England Cricket (@englandcricket) March 28, 2021
இங்கிலாந்து அணி வெற்றி பெற ஓவருக்கு 6.6 ரன்கள் வீதம் ரன் எடுக்க வேண்டி உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாய சிறப்பாக பந்து வீசினால் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தலாம்.