சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதேசமயம் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கைக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் அணி கேப்டனாக சச்சின் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM